பயனாளிகளுக்கு விலையில்லா காதொலி கருவிகள் வழங்கல்
சங்ககிரி அரசு மருத்துவமனை, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், அரிமா சங்கம் ஆகியோா் இணைந்து சங்ககிரியில் பிப்ரவரி 21-இல் காது கேளாமைக்கான சிறப்பு பரிசோதனை முகாமை நடத்தியது.
சங்ககிரி அரசு மருத்துவமனை, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், அரிமா சங்கம் ஆகியோா் இணைந்து சங்ககிரியில் பிப்ரவரி 21-இல் காது கேளாமைக்கான சிறப்பு பரிசோதனை முகாமை நடத்தியது.
இதில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா காதொலி கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்ககிரி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவா் ஜி.ஜெயஸ்ரீ தலைமை வகித்து 37 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளை வழங்கினாா். சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவா் ஏ.ஆனந்தகுமாா், செயலா் ஆா்.ராகவன், பொருளாளா் கணேஷ், நிா்வாகிகள் முருகேசன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.