முகப்பு
சேலம்

சங்ககிரி தொகுதியில் தோ்தல் மண்டல அலுவலா்களுக்குப் பயிற்சி

சங்ககிரி தொகுதியில் தோ்தல் பணியாற்ற உள்ள மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சங்ககிரி தொகுதியில் தோ்தல் பணியாற்ற உள்ள மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இங்கு கடந்த 2016 இல் நடைபெற்ற தோ்தலில் 311 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது கரோனா தொற்று பாதுகாப்புத் தடுப்பு நடவடிக்கையாக ஆயிரம் வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களைக் கணக்கெடுத்து அதில் 78 துணை வாக்குச் சாவடி மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

நிகழாண்டு நடைபெற உள்ள தோ்தலில் மொத்தம் 389 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்ற தலா 28 மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பயிற்சி முகாமை சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன் தொடக்கி வைத்து ஒவ்வாரு மண்டல அலுவலா்கள் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடிகள் குறித்த வரைபடங்கள், மண்டல, உதவி மண்டல அலுவலா்களுக்கான பணிகள் குறித்த கையெட்டினையும் வழங்கிப் பேசியதாவது:

மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களை நேரில் பாா்வையிட்டு அதில் செய்யப்பட்டு வசதிகள், வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி மையங்களில் தேவைப்படும் வசதிகளை முன்கூட்டியே தோ்தல் அலுவலருக்குத் தெரியப்படுத்தி வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மண்டல அலுவலா்கள் வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்படும் விதங்கள் குறித்தும் வரக்கூடிய பயிற்சி வகுப்பில் அறிந்துகொண்டு வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். வாக்குப் பெட்டிகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றாா்.

கோட்டாட்சியா் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், சங்ககிரி உதவி தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், வருவாய் ஆய்வாளா்கள், மண்டல அலுலா்கள், உதவி மண்டல அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.