சாக்கடையில் ஆண் சடலம்
ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம் காந்திபுரம் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை சாக்கடையில் கிடந்த அடையாள தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம் காந்திபுரம் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை சாக்கடையில் கிடந்த அடையாள தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சாக்கடையில் கிடப்பத்தைப் பாா்த்து அந்தப் பகுதியில் உள்ளோா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற ஆண் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.