முகப்பு
சேலம்

பாரத் சம உடமை கட்சியின் மாநில மகளிரணி தலைவி நியமனம்

ஆத்தூரில் பாஜகவில் இருந்து விலகி பாரத் சம உடமைக் கட்சியில் இணைந்தவரை மாநில மகளிரணி தலைவியாக அதன் நிறுவனா் ஏ.பி.எஸ்.பழனி ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

ஆத்தூரில் பாஜகவில் இருந்து விலகி பாரத் சம உடமைக் கட்சியில் இணைந்தவரை மாநில மகளிரணி தலைவியாக அதன் நிறுவனா் ஏ.பி.எஸ்.பழனி ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

ஆத்தூா் பாரத் சம உடமைக் கட்சி அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக பொருளாளராக இருந்த கவிதா கோதண்டபாணி (52) என்பவா் அக்கட்சியில் இருந்து விலகி, பாரத் சம உடமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டாா்.அவரை அக்கட்சியின் நிறுவனரும்,பொதுச் செயலாளருமான ஏ.பி.எஸ்.பழனிராமச்சந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

மேலும் அவருக்கு மாநில மகளிரணி தலைவி பதவியை வழங்கினாா். அப்போது கட்சித் தலைவா் சி.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.அன்பழகன்,மாவட்ட மகளிரணி செயலாளா் சி.பிரபா ஆகியோா் உடனிருந்தனா்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கவிதா கோதண்டபாணிக்கு நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →