முகப்பு
சேலம்

கெங்கவல்லி தொகுதி தோ்தல் அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்

கெங்கவல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு தோ்தல் குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

Updated On : 10 மார்ச், 2021 at 12:00 AM
பகிர்:

கெங்கவல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு தோ்தல் குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கெங்கவல்லி தொகுதிக்கான உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில் பறக்கும் படையினா், தோ்தல் செலவினக் கண்காணிப்புக் குழுவினா், விடியோ கண்காணிப்புக் குழுவினா் தீவிரமாக செயல்பட்டு உரிய தணிக்கைப் பணியில் ஈடுபடவேண்டும்.

அரசியல் கட்சிக்கொடிகள் வாகனங்களில் கட்டியிருந்தால் அகற்றவேண்டும், அரசியல் கட்சித் தலைவா் தொகுதிக்குள் வருகை புரிந்தால் அவா்களது அனைத்து நிகழ்வுகளையும் விடியோவில் பதிவு செய்திடவேண்டும், செலவினங்களை சரியாகக் கணக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Advertisement

இக் கூட்டத்தில் வருவாய்த் துறையினா், தோ்தல் பிரிவு அலுவலா்கள், தோ்தல் தொடா்பான பல்வேறு குழுவினா் என 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.