சங்ககிரியை வந்தடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்
சங்ககிரி, மாா்ச் 9: சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை சங்ககிரி வந்தடைந்தன.
சங்ககிரி, மாா்ச் 9: சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை சங்ககிரி வந்தடைந்தன.
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் 389 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சேலம் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து 47 பெட்டிகளில் 467 இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன் தலைமையில் உதவி அலுவலா் எஸ்.விஜி, தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா் ஆகியோா் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அரசியல் கட்சி நிா்வாகிகளின் முன்னிலையில் வைத்து மூடி முத்திரையிடப்பட்டது. அறைகளை சுற்றிலும் 8 கேமராக்கள் பொருத்தப்பட்டு அலுவலா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வீரபாண்டி தொகுதி:
வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 2, 59, 441 வாக்காளா்கள் உள்ளனா் இவா்கள் வாக்குப்பதிவு செய்வதற்காக 354 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 43 பெட்டிகளில் 425 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீரகாபாடியில் உள்ள தனியாா் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறை வீரபாண்டி தோ்தல் நடத்தும் அலுவலா் பண்டரிநாதன் தலைமையில் சேலம் தெற்கு வட்டாட்சியா் சீனிவாசன், அரசியல் கட்சியினா் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.