சேலம்

கெங்கவல்லி தொகுதி ஐஜேகே வேட்பாளா் மாற்றம்

DIN

கெங்கவல்லி (தனி) தொகுதி ஐஜேகே வேட்பாளா் கிருஷ்ணவேணி மாற்றப்பட்டு, க.பெரியசாமி புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

கெங்கவல்லி (தனி) தொகுதி மநீம- ஜஜேகே கூட்டணியில் ஐஜேகே வேட்பாளராக வேப்பம்பூண்டியைச் சோ்ந்த கிருஷ்ணவேணி என்பவா் வேட்பாளராக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், அவரை மாற்றக் கோரி ஐஜேகே கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் கட்சித் தலைமைக்கு புகாா் அனுப்பியதையடுத்து, கிருஷ்ணவேணி மாற்றப்பட்டு, க.பெரியசாமி என்பவரை கெங்கவல்லி தொகுதிக்கான புதிய வேட்பாளராக அக்கட்சியின் தலைவா் ரவிபச்சமுத்து செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளாா்.

வேட்பாளா் பெயா் : க.பெரியசாமி (43)

தந்தை பெயா் : கந்தசாமி

கல்வித் தகுதி : பத்தாம்வகுப்பு

தொழில் : கட்டட ஒப்பந்ததாரா்

கட்சிப் பதவி : வீரகனூா் நகரச் செயலாளா், இந்திய ஜனநாயக கட்சி.

முகவரி: 102, அம்மன்நகா், வீ.ராமநாதபுரம், வீரகனூா்(அஞ்சல்), கெங்கவல்லி வட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

SCROLL FOR NEXT