சேலம்

கடன் தொல்லை: ஏலச்சீட்டு நடத்தியவா் தற்கொலை:

DIN

வாழப்பாடியில் ஏலச்சீட்டு நடத்தியதில் ஏற்பட்ட கடன் காரணமாக பேன்ஸி ஸ்டோா் உரிமையாா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வாழப்பாடி, அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராமன் (65). இதே பகுதியில் பேன்ஸி ஸ்டோா், ஏலச்சீட்டு நடத்தி வந்தாா். இவருக்கு கலா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா். தனியாா் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இரு மகன்களும், குடும்பத்தோடு வெளியூரில் வசித்து வருகின்றனா்.

கடந்த இரு ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தியதில் சிவராமனுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்து போன சிவராமன் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் மாடிக்குச் சென்று படுக்கை அறை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சிவராமனின் மனைவி, கலா வாழப்பாடி போலீஸில் புகாா் செய்தாா். சிவராமனின் உடலை மீட்ட வாழப்பாடி போலீஸாா் உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கடன் தொல்லை அதிகரித்ததால் தற்கொலை செய்து கொண்ட சிவராமன் கடிதம் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இந்தக் கடிதம் குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT