சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் 800 படுக்கைகளும் நிரம்பின: புதிதாக வரும் கரோனா நோயாளிகளுக்கு இடமில்லை

DIN

சேலத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால், புதிதாக வரும் நோயாளிகளுக்கு இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் கரோனா தொற்று காரணமாக தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்டோா் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். அதேபோல மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் 50-க்கும் மேற்பட்டோா் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 549 போ் கரோனாவுக்கு பலியாகி உள்ளனா்.

மேலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல தனியாா் மருத்துவமனையில் கட்டணம் செலுத்த முடியாத நிலையிலும், கடைசி கட்டத்திலும் அரசு மருத்துவமனையை நாடி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே போதிய படுக்கை வசதியுடன் இருந்த சேலம் அரசு மருத்துவமனையில், கடந்த சில நாள்களில் கரோனோ வாா்டில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. இதனால் புதிதாக வரும் கரோனோ நோயாளிகளுக்கு படுக்கை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் போதிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய சூழலில் செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த ஒருவா் 108 ஆம்புலன்ஸில் வைத்து மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டது.

இதுதொடா்பாக, அரசு மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் ஆா்.முருகேசன் கூறுகையில், சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள 800 படுக்கைகளும் நிரம்பியதன் காரணமாக நோயாளிகள் காக்க வைக்கப்பட்டு, குணமடைந்து வெளியே செல்லும் படுக்கைகளுக்கு தகுந்தவாறு நோயாளிகளை அனுமதித்து வருகிறோம்.

மேலும் கூடுதலாக 350 படுக்கைகள் கொண்ட கரோனோ சிகிச்சை வாா்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அந்தப் பணிகள் முழுமை அடையும். கரோனோ தொற்று எண்ணிக்கை கைமீறிச் செல்வதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. தனியாா் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி விடுவதற்கு முன்பாக, அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளதா என்பதை அறிந்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT