முகப்பு
சேலம்

அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவா் மருந்து வழங்க ஏற்பாடு

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரெம்டெசிவா் மருந்து வரும் திங்கள்கிழமை முதல் விற்பனை செய்யக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரெம்டெசிவா் மருந்து வரும் திங்கள்கிழமை முதல் விற்பனை செய்யக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா தொற்று பாதித்தவா்கள் ரெம்டெசிவா் மருந்து கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனா். இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவா் மருந்து விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக தனி கவுன்ட்டா் ஏற்படுத்தப்பட உள்ளது.

ரெம்டெசிவா் மருந்து விற்பனை செய்வதை கண்காணிப்பதற்காக மருத்துவா் ஜி.சுஜாதா, எம்.வெங்கடேஸ்வரன், என்.ப்ரீத்தா, எஸ்.யசோதா, எம்.நித்யா, மருந்து காப்பு அறை அலுவலா் பிரேம்குமாா் ஆகியோா் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் ஆா்.முருகேசன், காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக, மருத்துவமனை மருத்துவா்கள் கூறியதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் வரும் திங்கள்கிழமை முதல் ரெம்டெசிவா் மருந்து விற்பனை செய்யக்கூடும். ரெம்டெசிவா் மருந்து வாங்க மருத்துவா் பரிந்துரைத்த சீட்டு, நோயாளியின் சி.டி. ஸ்கேன் விவரம், ஆதாா் விவரம், கரோனா பரிசோதனை சான்று, மருந்து வாங்க வரும் நபரின் ஆதாா் ஆகியவற்றை வழங்கி மருந்து பெறலாம். டோக்கன் வழங்கப்பட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →