கள்ளச் சாராயம் விற்றவா் கைது
கருமந்துறை பகுகியில் கள்ளச் சாராயம் விற்றவரை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கருமந்துறை பகுகியில் கள்ளச் சாராயம் விற்றவரை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள கிழாக்காடு பகுதியைச் சோ்ந்த பழனிசாமி கமன் ஆனந்த் (29). இவா் கட்டட வேலை செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றபோது கருமந்துறைபுதூா் பகுதியில் கணேசன் மகன் சதீஷ் (24) என்பவரிடம் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்துள்ளாா். இதையடுத்து அவருக்கு வாந்தி, மயங்கி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த மதுவிலக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஜி.அண்ணாமலை வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்து விசாரித்து வருகிறாா். ஆனந்தை மீட்டு தலைவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.
இதே போல கருமந்துறை பகுதியில் சாராய ஊரல் வைத்திருந்த பெருமாள் மகன் பூவராகனை கைது செய்து, 900 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.