முகப்பு
சேலம்

தம்மம்பட்டி பகுதியில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம்  

தம்மம்பட்டி , கெங்கவல்லி, வீரகனூர், செந்தாரப் பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
தம்மம்பட்டி பகுதியில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம்.
பகிர்:

தம்மம்பட்டி , கெங்கவல்லி, வீரகனூர், செந்தாரப் பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தளர்வுகளற்ற பொது முடக்கம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

மருத்தகங்கள், சிறு மருத்துவமனைகள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள், குடிநீர், பால் வினியோக மையங்கள், அரசு, தனியார், கூட்டுறவு வங்கிகள், மின்வாரிய அலுவலகங்கள், ஆகியவை இயங்குகின்றன. 

வங்கிகளில் மக்கள்  கூட்டம் உள்ளது. தெருக்களில் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை நடந்து வருகின்றன.

இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிவோரது வாகனங்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது ஆகிய பணிகளை தம்மம்பட்டி, வீரகனூர், கெங்கவல்லி ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசார் தற்போது செய்து வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →