சேலம்

சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

DIN

19 மாதங்களுக்குப் பிறகு சேலம் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 

தமிழகத்தில் கரோனா நோய் தொற்று பரவலைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நோய் தொற்று பரவல் குறையத் தொடங்கியதையடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. 


இதனிடையே நோய்த்தொற்றின் தாக்கம் மேலும் குறையத் தொடங்கியதையடுத்து நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. 

இதன்படி 19 மாதங்களுக்குப் பிறகு சேலம் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. சேலம் அழகாபுரம் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மலர்கொத்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT