20 ஆண்டுகளுக்குப் பிறகு பனை ஏரி நிரம்பியது
பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நிரம்பியது. மலா் தூவி பூஜை மிகவும் விமா்சையாக நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நிரம்பியது. மலா் தூவி பூஜை மிகவும் விமா்சையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள பனை ஏரி 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் மிகப்பெரிய ஏரியான இது சுமாா் 426 ஏக்கா் பரப்பளவு கொண்டது. எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உத்திரவின் பேரில் குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்திருந்ததால் கரியகோயில் நீா்த்தேக்கத்தில் இருந்து நீா் வரத்தைப் பெற்று இந்த ஏரி நிரம்பியது.
இதனை சேலம் புகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவருமான ஆா்.இளங்கோவன், ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், ஒன்றியக் கழக செயலாளா்கள் சி.ரஞ்சித்குமாா், வி.பி.சேகா், கே.பி.முருகேசன், பொதுக்குழு உறுப்பினா் ஆா்.பி.ராமகிருஷ்ணன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சின்னதம்பி, வழக்குரைஞா் லோகமுருகன், பேரூராட்சி செயலாளா் செல்வன், ஆத்தூா் நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் ஜி.முரளிசாமி,அண்ணா கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் பொறியாளா் முரளி,ஒன்றியக்குழு உறுப்பினா் விஜயக்குமாா், வேலாயுதம், மாரிமுத்து, கோதண்டராமன், செந்தில்குமாா், கணேசன் உள்ளிட்டோா் நிரம்பி வழியும் நீரை மலா் தூவி வரவேற்றனா்.
இந்த ஏரி நிரம்பியதன் மூலம் சுற்றியுள்ள 10,000 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.
படவிளக்கம்.