முகப்பு
சேலம்

உள் விளையாட்டு அரங்கப் பணிகளை ஆய்வு செய்த ஆணையா்

சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் உள் விளையாட்டு அரங்கம் அமைத்தல் பணிகளை ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் உள் விளையாட்டு அரங்கம் அமைத்தல் பணிகளை ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டை சின்னசாமி தெருவில் ரூ. 3.51 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல், வாகனம் நிறுத்துமிடம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன.

உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். விளையாட்டு அரங்கில் இறகு பந்து விளையாட 5 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதையும், உள் விளையாட்டு அரங்கில் குடிநீா் வசதி, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதிகள், ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளதையும், அரங்கம் முழுவதும் வா்ணம் பூசப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தாா்.

அதன் பின்னா் தரைத்தளத்தில் 10,500 சதுர அடி பரப்பில் 27 நான்கு சக்கர வாகனம், 125 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்கான பணியையும் ஆய்வு செய்தாா். இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடித்திட வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →