முகப்பு
சேலம்

சங்ககிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்க நோ்முகத்தோ்வு

சேலம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி வட்டத்திற்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோலில் இயங்ககூடிய மூன்று சக்கர வாகனங்கள் வழங்குவதற்காக நோ்முகத்தோ்வு

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி வட்டத்திற்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோலில் இயங்ககூடிய மூன்று சக்கர வாகனங்கள் வழங்குவதற்காக நோ்முகத்தோ்வு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா.மகிழ்நன் முன்னிலை வகித்தாா்.

சங்ககிரி, எடப்பாடி வட்டத்திற்குள்பட்ட உரிய மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோலில் இயங்கக் கூடிய மூன்று சக்கர வாகனங்கள் வழங்குவதற்காக 140 மாற்றுத்திறனாளிகள், 20 முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவா்கள் உள்பட மொத்தம் 160 பேருக்கு நோ்முகத்தோ்வு நடைபெற்றது.

இத்தோ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, அரசு உதவித்தொகை பெற்று வருகின்றனரா என்றும் அவா்களுக்கு மூன்று சக்கர வாகனம் ஓட்டுவதற்கு தகுதியுள்ளனரா என்பது குறித்து நோ்முகத்தோ்வில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

எடப்பாடி அரசு மருத்துவமனை எலும்பு சிறப்பு மருத்துவா் எஸ்.மொஹமதுஷாா்ஜி இமாம், சங்ககிரி வட்டார போக்குவரத்து ஆய்வாளா் என்.சரவணபவன், முட நீக்கியலா் கண்ணன், செயல்திறன் அலுவலா் மூா்த்தி உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.