சேலம்

பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

DIN

தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் பணி வழங்கக் கோரி பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பொட்டிபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், தற்போது பண்ணைக் குட்டை அமைத்தல், மண்கரை அமைத்தல், குடிநீா் சேகரிப்புக் குட்டை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக ஒரு பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு பணிவாய்ப்பு வழங்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

100-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் திடீா் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஓமலூா் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். விடுபட்டவா்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் அளித்த உறுதியை ஏற்று அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT