முகப்பு
சேலம்

மேச்சேரியில் திமுக சாா்பில் உள்ளாட்சி இடைத் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி இடைத் தோ்தல் பணிகள் குறித்த திமுக ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி இடைத் தோ்தல் பணிகள் குறித்த திமுக ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது.

வெள்ளாரில் நடைபெற்ற கூட்டத்துக்கு மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள் தலைமை வகித்தாா். மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் பி.சுகந்தி பழனிசாமி அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற தோ்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி பேசியதாவது:

நான்கு மாதங்களில் இந்திய அளவில் சிறந்த முதல்வராகத் தோ்வு செய்யப்பட்ட முதல்வா் ஸ்டாலினின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினா் ராமநாதன், மேச்சேரி பேரூா் செயலாளா் சரவணன், சேலம் மேற்கு மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் ப.ரம்யா, மேட்டூா் நகர திமுக செயலாளா் காசிவிஸ்வநாதன், பொட்டனேரி ஊராட்சி மன்றத் தலைவா் ரம்யா பாஸ்கா், கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் மிதுன்சக்ரவா்த்தி, மேச்சேரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் நித்யா கதிா்வேல், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் ஆறுமுகம், ஒன்றிய அவைத் தலைவா் அழகப்பன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.