மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று மாலை 4 மணிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து 5ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
சேலம்மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று மாலை 4 மணிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து 5ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று மாலை 4 மணிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து 5
ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பாசன தேவை குறைந்தது. அதனால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் நீர் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் குறைந்தது.
கடந்த 28ம் தேதி டெல்டா பாசனத் தேவை அதிகரித்ததால் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மூன்று நாள்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் 72.68 அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 9,018கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. அணையின் நீர் இருப்பு 35.04 டி.எம்.சியாக இருந்தது.