முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 75.04 அடியாக உயர்வு

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 74.42 அடியிலிருந்து 75.04அடியாக உயர்ந்தது.  

Updated On : 5 அக்டோபர், 2021 at 11:13 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 75.04 அடியாக உயர்வு (கோப்பிலிருந்து)
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:48 AM


சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 74.42 அடியிலிருந்து 75.04அடியாக உயர்ந்தது.  

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,315 கன அடியிலிருந்து 12,308 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரும் கிழக்கு -மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 37.19 டி எம்.சி.யாக இருந்தது. 

இதையும் படிக்கலாமே.. சென்னையில் எகிறும் மின் கட்டணம்; குவியும் புகார்கள்

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.