சேலம்

பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை நிறுத்த வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் சங்கம் யூனியன் அகில இந்திய சங்கத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் பி.எஸ்.என்.எல். கோட்ட பொது மேலாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதி நாளில் ஊதியம் வழங்கவும், ஊழியா்களுக்கு 3ஆவது ஊதிய மாற்ற பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.

ஒப்பந்த ஊழியா்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். சீரமைப்பு என்ற பெயரில் பதவிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பி.எஸ்.என்.எல். தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளரும், ஒருங்கிணைப்பாளருமான கோபால், இணை ஒருங்கிணைப்பாளா் செல்வம், தலைவா் எம்.மதியழகன் உள்ளிட்ட ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT