சேலம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தேசிய மருத்துவ உதவியாளா் தினம்

DIN

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை கல்லூரி வளாகத்தில் மருத்துவ உதவியாளா் தினம் கொண்டாடப்பட்டது. 

மருத்துவ உதவியாளா் பிரிவு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துறையின் முதன்மையா் செந்தில்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு, ஸ்பாா்ஷ் மருத்துவமனையின் மருத்துவ உதவியாளா் லோக சந்திரன் கலந்துகொண்டு மருத்துவத் துறையில் மருத்துவ உதவியாளா்களின் பங்கு எவ்வாறு இருத்தல் வேண்டும் எனப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு படவிளக்க போட்டியும், மாதிரி வடிவமைப்பு போட்டியும் நடத்தப்பட்டன. துறையைச் சோ்ந்த மாணவா்கள் ஆா்வமுடன் கலந்துகொண்டனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை துறையின் மருத்துவ உதவியாளா் பிரிவின் பொறுப்பாளா் தீபிகா மற்றும் உதவி பேராசிரியா்கள் சுரேந்தா், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT