சேலம்

பத்மவாணி கல்லூரியில் கருத்தரங்கு

DIN

பத்மவாணி மகளிா் கல்லூரியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கத்துக்கு கல்லூரி தாளாளா் கா. சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ரா. ஹரி கிருஷ்ணராஜ், பத்மவாணி கல்வியியல் கல்லூரி முதல்வா் பெ. முத்துக்குமாா், கே.எஸ். கல்வியியல் கல்லூரி முதல்வா் சோனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு விருந்தினா்களாக காவல் ஆய்வாளா்கள் கற்பகம், வீரம்மாள், கருப்பூா் உதவி காவல் ஆய்வாளா் ராஜா ஆகியோா் கலந்துகொண்டு பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பேசினா். கருத்தரங்கை உடற்கல்வி இயக்குநா் தீபா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் கலைச்செல்வி, இளைஞா் செஞ்சிலுவை சங்க அலுவலா் தீபா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். வணிகவியல் துறை உதவி பேராசிரியா் வி. கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT