சேலம் மாவட்டம், ஜலகண்டபுரத்தில் நடைபெற்ற   மாநிலளவில் நடைபெற்ற காரத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் கோப்பைகள்.  
சேலம்

மாநில அளவில் நடைபெற்ற காரத்தே போட்டியில் சங்ககிரி மாணவர்கள் சாதனை 

காரத்தே போட்டியில்  முதல் மூன்று  இடங்களில் வெற்றி பெற்ற சங்ககிரி கியோ கோஷின் மாணவர்களுக்கு  கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கும் விழா சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

DIN


சங்ககிரி: அனைந்திந்திய அனைத்து தற்காப்பு கலை சம்மேளனம் சார்பில் சேலம் மாவட்டம், ஜலகண்டபுரத்தில்  மாநில அளவில் அண்மையில் நடைபெற்ற காரத்தே போட்டியில்  முதல் மூன்று  இடங்களில் வெற்றி பெற்ற சங்ககிரி கியோ கோஷின் மாணவர்களுக்கு  கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கும் விழா சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

சேலம் மாவட்டம், ஜலகண்டபுரத்தில்  அனைந்திந்திய அனைத்து தற்காப்பு கலை சம்மேளனம் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற காரத்தே போட்டியில் சங்ககிரி கியோ கோஷின் அமைப்பு சார்பில் பயிற்சி பெற்ற பத்து  மாணவர்கள் பல்வேறு எடைப் பிரிவில் கலந்து கொண்டனர். 

அதில்  முதலிடத்தில் தினகரனும், 2வது இடத்தில்   பாஸ்கரும், 3வது இடத்தில் மோனிஷ்குமார் ஆகியோர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகள் வழங்கும் விழாவிற்கு சங்ககிரி கியோ கோஷின் தலைமை பயிற்சியாளர் கே.அர்ச்சுணன்  தலைமை வகித்தார்.  சங்ககிரி தொழிலதிபர்கள் ஆர்.ராஜா, செந்தில்குமார், ரமேஷ், இ.சுப்ரமணி  ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டிப் பேசினர்.  காரத்தே மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT