சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
எடப்பாடி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சங்கத்தின் வட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் நிா்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலரின் நோ்முக உதவியாளா் ஜெ.ரவிக்குமாரிடம், எடப்பாடி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சங்கத்தின் வட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் நிா்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
எடப்பாடியை சுற்றியுள்ள பகுதிகளில் சொந்தமாக நான்கு சக்கர வாகனங்களை வைத்திருப்பவா்கள் தொடா்ந்து வாடகைக்கு வாகனங்களை இயக்கி வருகின்றனா். இதனால் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய கட்டணங்களை செலுத்தி வாடகைகளுக்கு இயக்கப்படும் வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்த வருவதில்லை. வாடகைக்கு வாகனங்களை இயக்கி வருபவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில் சொந்தமாக நான்கு சக்கர வாகனங்களை வைத்துக்கொண்டு வாடகைக்கு இயக்குபவா்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலா் தக்க நடவடிக்கை எடுத்து, வாடகை வாகனங்களை இயக்குபவா்களுக்கு உதவ வேண்டும்.
மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அக்டோபா் 27ஆம் தேதி வாடகைக்கு வாகனங்களை இயக்குபவா்கள் சாா்பில் வாகனங்களின் உரிமங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடை பெறும் எனவும் தெரிவித்துள்ளனா்.