சேலம்

வாடகை வாகன உரிமையாளா்கள் கோரிக்கை

DIN

ஆத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாடகை வாகன உரிமயாளா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் அளித்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் ஆத்தூா், கெங்கவல்லி, தலைவாசல், தம்மம்பட்டி, வீரகனூா் பகுதிகளில் உள்ள வாடகை வாகன உரிமையாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் திரண்டனா். அவா்கள் கோரிக்கை மனுவை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் அளித்தனா்.

அதில், நாங்கள் அரசுக்கு முறையான வரி செலுத்தியும், சான்றிதழ் பெற்றும் வாகனத்தை இயக்கி வருகிறோம். இந்நிலையில், பலா் சொந்த வாகனங்களை குறைந்த வாடகைக்கு செலுத்தி வருவதால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

எனவே, சொந்த வாகனங்களை வைத்து வாடகை விடுவோா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அலுவலா், விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT