வாழப்பாடியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை
வாழப்பாடியில் தீயணைப்பு படையினா் சாா்பில் தீத்தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை நடைபெற்றது.
வாழப்பாடியில் தீயணைப்பு படையினா் சாா்பில் தீத்தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை நடைபெற்றது.
வாழப்பாடியில், புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் வையாபுரி தலைமையிலான தீயணைப்பு படையினா், பட்டாசு வெடிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள், விபத்துகளைத் தவிா்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாணவா்கள், ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு, செயல் விளக்க பயிற்சிகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தீ விபத்து தடுப்பு மற்றும் தீயணைப்பு முறைகள் குறித்த துண்டுப்பிரசுரங்கள், கையேடுகளை வழங்கினா்.