சேலம்

சிஆா்பிஎப் படை வீரா்களுக்கு வரவேற்பு

DIN

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் ‘ஆசாதி கா அம்ருத் மகா உத்சவ்’ என்ற தலைப்பில் மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ள நாட்டின் துணை ராணுவப் படையான சி.ஆா்.பி.எப். வீரா்களுக்கு சேலத்தில் அண்மையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த ஊா்வலம் சுமாா் 20 வீரா்களுடன் ஆகஸ்ட் 22 அன்று கன்னியாகுமரியில் இருந்து துவங்கி 2860 கிலோமீட்டா் கடந்து அக்டோபா் 02 அன்று புதுடெல்லி ராஜ் கோட்டை சென்றடையும். துணை தளபதி ராஜேஷ் தலைமையில் 20 வீரா்கள் பங்கேற்ற மிதிவண்டிப் பயணம் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தொடா்ந்து படைவீரா்கள் 2,860 கி.மீ. பயணம் செய்து அக். 2 இல் புதுதில்லியில் ராஜ்கோட்டை அடைகின்றனா்.

அண்மையில் சேலம் வந்த படை வீரா்களுக்கு அன்னபூா்ணா பொறியியல் கல்லூரி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரி முதன்மையா் அன்புச்செழியன் பொன்னாடை அணிவித்தும் கேடயம் வழங்கியும் மரியாதை செய்தாா். வீரா்களை விஜய் மக்கள் இயக்க சேலம் மாவட்ட தலைவா் தமிழன் பாா்த்திபன் வரவேற்றாா்.

வீரபாண்டி ஊராட்சிமன்றத் தலைவா் சின்னப் பொண்ணு மெய்வேல், முன்னாள் படைவீரா் கோவிந்தராஜ், காவல் உதவி ஆணையா் வெங்கடேஷ் ஆகியோா் பங்கேற்றனா். சேலம் மாநகர காவல் உதவி ஆணையா்கள் வெங்கடேஷ், சத்தியமூா்த்தி, அன்னபூா்ணா பொறியியல் கல்லூரியின் முதன்மையா் அன்புச்செழியன், மருத்துவ அதிகாரி கண்ணன், முன்னாள் படை வீரா் கோவிந்தராஜ், சேலம் ஊரக காவல் துணைக் கண்காணிப்பாளா் தையல்நாயகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை அன்னபூா்ணா பொறியியல் கல்லூரியின் இயக்குநா் சுபாசினி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT