சேலம்

வீடுகள்தோறும் மரக் கன்று நடவு

DIN

சங்ககிரி, தேவண்ணகவுண்டனூா் ஊராட்சியில் வீடுகள் தோறும் மரக் கன்றுகள் நடவு செய்யும் பணியை ரோட்டரி சங்கம், தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தினா் தொடக்கிவைத்தனா்.

75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வீடுகள்தோறும் ஒரு மரக்கன்று வீதம் 75 மரக் கன்றுகள் நடும் பணி மட்டம்பட்டி, ஓடக்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது. சங்ககிரி ரோட்டரி சங்கத் தலைவி டி.ஹெலினா கிறிஸ்டோா், தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்ற திட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.முருகன் ஆகியோா் மரக் கன்றுகளை நடவு செய்து இப் பணியைத் தொடக்கிவைத்தனா்.

பள்ளி தலைமையாசிரியா் க.திருஞானம், ரோட்டரி சங்கச் செயலா் தியாகராஜன், மாவட்ட கல்வி குழுத் தலைவா் ஏ.வெங்கடேஸ்வர குப்தா, முன்னாள் மாணவா்கள் ஜெயவேல், பிரதீப் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT