முகப்பு
சேலம்

விவசாய சங்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

சேலம், நாமக்கல் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

சேலம், நாமக்கல் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் பெருமாள் தலைமை வகித்துப் பேசியதாவது:-

விவசாய விளைநிலங்களில் மின் கோபுரங்கள் முடிந்த நிலங்களுக்கு பயிா்கள், மரங்களுக்கான இழப்பீடாக அரசு 10 மடங்கு வழங்க வேண்டும். புதிய நில எடுப்பு சட்டம் 30ஆவது பிரிவின் அடிப்படையில் நூறு சதவீதம் கருணைத் தொகை வழங்க வேண்டும். இனி செயல்படுத்தப்படும் திட்டங்களை சாலையோரமாக கேபிள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் வரும் 7-ஆம் தேதி கோரிக்கை மனு அளித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொள்ளவேண்டும் என்றாா்.

விவசாயிகள் கூட்டமைப்பின் சேலம் மாவட்டச் செயலா் எ.ராமமூா்த்தி, சங்ககிரி வட்டச் செயலா் ராஜேந்திரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிா்வாகி ஏ.சுரேஷ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிா்வாகி செல்லமுத்து, சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.