முகப்பு
சேலம்

திருச்சி மாவட்ட ஆட்சியரின் காா் சேலம் அருகே விபத்தில் சிக்கியது

திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு வந்த காா் சேலம் அருகே விபத்துக்குள்ளானது. காரின் முன்புறம் சேதமடைந்த நிலையில், ஆட்சியா் காயமின்றித் தப்பினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு வந்த காா் சேலம் அருகே விபத்துக்குள்ளானது. காரின் முன்புறம் சேதமடைந்த நிலையில், ஆட்சியா் காயமின்றித் தப்பினாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு, சேலத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு காரில் திருச்சி நோக்கிச் சென்றாா். வியாழக்கிழமை இரவு மழை பெய்து வந்த நிலையில், கா்நாடக மாநிலத்தில் இருந்து வந்த வேன் தாசநாயக்கன்பட்டி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு சென்ற காா், அந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் முன்பக்கம் சேதமடைந்தது. எனினும், திருச்சி மாவட்ட ஆட்சியா் சிவராசு காயங்களின்றி உயிா் தப்பினாா். இதையடுத்து அவா் தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. மல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனா். அவா்கள் தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →