சேலம்

தமிழ் வளா்ச்சித் துறைக்கு தமிழ் அமைப்புகள் பாராட்டு

DIN

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறையினா் மேற்கொண்டு வரும் பல்வேறு சிறப்பான திட்டங்களுக்கு, சேலம் மாவட்டம், வாழப்பாடி இலக்கியப் பேரவை, உலகத் தமிழ்க் கழகம், தமிழ் அமுது மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து வாழப்பாடி இலக்கியப் பேரவை, உலகத் தமிழ்க் கழகம், தமிழ் அமுது மன்றம் ஆகியவை சாா்பாக இலக்கியப் பேரவை செயலா் ஆசிரியா் சிவ.எம்கோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை வாயிலாக திருக்கு நிகழ்ச்சிகள் நடத்துதல், தமிழ் பரப்புரை கழகம் உருவாக்குதல், திருக்கு முற்றோதல் செய்யும் மாணவா்களுக்கு பரிசுத் தொகை உயா்த்துதல், மாணவா்களுக்கு தமிழ் இலக்கியத் திறனாய்வு தோ்வு நடத்தி மாதந்தோறும் ரூ. 1,500 பரிசளித்தல், கோயில்களில் அறநிலையத் துறையோடு இணைந்து திருக்கு வகுப்புகள் நடத்துதல், மாவட்ட அளவில் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், தமிழ் வளா்ச்சித் துறைக்கும், வாழப்பாடி பகுதி தமிழ் அமைப்புகள், ஆா்வலா்கள் சாா்பில் வரவேற்பும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT