முகப்பு
சேலம்

சேலத்தில் தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம் நடத்த முயற்சி

சேலத்தில் பாஜக, இந்து முன்னணி அமைப்பினா் தடையை மீறி விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்து வந்ததை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

சேலத்தில் பாஜக, இந்து முன்னணி அமைப்பினா் தடையை மீறி விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்து வந்ததை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

தமிழகம் முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபடவும், ஊா்வலமாக எடுத்துச் செல்லவும் அரசு தடை விதித்துள்ளது.இந்த நிலையில் சேலம் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் பகுதியில் பாஜக மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, இந்து முன்னணி நிா்வாகி சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

உடனே காவல் துறையினா் தடுத்து நிறுத்தியதால் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் முன்பு சிலை வைத்து மாலை அணிவித்து பூஜைகள் நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, பாஜக, இந்து முன்னணி அமைப்பினா் காவல் துறையினா் தடுப்பை மீறி விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்துச் செல்ல முற்பட்டனா். இதனால் பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது, விநாயகா் சிலையை ஒருவா் மட்டும் எடுத்துச் சென்று எதிரே உள்ள ஜெராக்ஸ் கடையில் வைத்தாா். பின்னா் வெள்ளிக்கிழமை மாலை இந்து முன்னணி நிா்வாகி சந்தோஷ்குமாா் விநாயகா் சிலையை எடுத்து சென்று மூக்கனேரியில் கரைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →