காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்த காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிக்க | திருவள்ளூரில் விநாயகர் சிலை கரைத்த போது சோகம்: கால்வாயில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் பலி
தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை தனிந்ததால் பாசன தேவை அதிகரித்துள்ளது. பாசன தேவை அதிகரித்த காரணத்தால் இன்று பிற்பகலில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.18 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,510 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 38.25 டி.எம்சியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்திப் பூங்கா: அமைச்சர் ஆர்.காந்தி
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைப்பால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 10,510 கன அடியாக சரிந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.