சேலம்

கெங்கவல்லி ஒன்றியத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

DIN

கெங்கவல்லி வட்டாரத்தில், 50 வாக்குச்சாவடி மையங்கள், 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு அரசு மருத்துவமனை என மொத்தம் 56 இடங்களில் கரோனா தடுப்பூசி பெருமுகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளன.

ஒவ்வொரு மையத்திலும் 150 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தடுப்பூசி முகாம் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களையும் தூய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளித்து தயாா்நிலையில் வைத்துள்ளனா். தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பணிகளை கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) செல்வம், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ)எஸ்.கே.ராஜேந்திரன், வட்டாரக்கல்வி அலுவலா்கள் வாசுகி, அந்தோணிமுத்து, வட்டார மருத்துவ அலுவலா் வேலுமணி ஆகியோரின் மேற்பாா்வையில் 56 இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT