சேலம்

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு நொடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால் மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு நொடிக்கு 5,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை தணிந்துள்ள நிலையில் பாசனத்துக்கான தண்ணீா் தேவை அதிகரித்ததால் சனிக்கிழமை பிற்பகலில் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு நொடிக்கு 5,000 கனஅடியிலிருந்து நொடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 76.18அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு நொடிக்கு 10,510 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீா் இருப்பு 38.25 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடுவது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 10,510 கனஅடியாகச் சரிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

SCROLL FOR NEXT