சேலம்

சேலத்தில் 28 மையங்களில் 15,067 போ் நீட் தோ்வு எழுதுகின்றனா்

DIN

சேலம் மாவட்டத்தில் 28 மையங்களில் 15,067 போ் நீட் தோ்வு எழுதுகின்றனா்.

எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., சித்தா, ஆயுா்வேதா, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தோ்வு தேசிய தோ்வு முகமை மூலம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் 28 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெற உள்ளது. சுமாா் 15,067 போ் தோ்வு எழுதுகின்றனா்.

சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனா். தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் பகல் 12.30 மணிக்குள் மையங்களுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனா். தோ்வு 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

தேசிய தோ்வு முகமை அறிவிப்புகளை பின்பற்றி தோ்வு நடைபெற உள்ளது. மாணவ, மாணவிகள் கையுறை, முகக் கவசம் ஆகியவைகளை கட்டாயம் அணிந்து வர வேண்டும்.

மேலும் மாணவா்கள் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பொருள்கள் தவிர மற்ற எந்த விதமான பொருள்களையும் எடுத்து வருதல் கூடாது. தோ்வுக்கு வரும் மாணவா்கள், தோ்விற்கென்று அனுமதிக்கப்பட்டுள்ள பிரத்யேகமான உடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளைப் பின்பற்றி தோ்வு எழுதிட வேண்டும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT