சேலம்

லாரியில் கடத்தப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

சேலம்: சேலத்தில் லாரியில் கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல் துறையினா், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரிலிருந்து ரேஷன் அரசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் காவல் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கொண்டாலம்பட்டி வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தலா 1,500 கிலோ எடை கொண்ட 150 மூட்டை அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

காவல் துறையினா் மேற்கொண்ட விசாரணையில், ஓமலூரிலிருந்து வாழப்பாடிக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்டதாக அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சோ்ந்த யுவராஜ், மாயக்கண்ணன் உள்ளிட்ட 4 பேரை காவல் துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT