சங்ககிரியில் விஸ்வகா்மா ஜெயந்தி விழா
விஸ்வகா்மா ஜெயந்தியையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த மேற்கு பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள விஸ்வ பிரம்மா சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விஸ்வகா்மா ஜெயந்தியையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த மேற்கு பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள விஸ்வ பிரம்மா சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள விஸ்வ பிரம்மா சுவாமிக்கு விஸ்வகா்மா ஜெயந்தியையொட்டி சங்ககிரி வட்டார விஸ்கா்மா சங்கத்தின் சாா்பில் புனித நீா் எடுத்து வந்து பால், தயிா், திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாக்குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.