முகப்பு
சேலம்

ஏரியில் நீரில் மூழ்கி அகதி பலி

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி ஏரியில் மீன் பிடிக்கச்சென்ற அகதி, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி ஏரியில் மீன் பிடிக்கச்சென்ற அகதி, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் நடராஜன்(62). இவருக்கு மனைவி மல்லிகா ,மகன் தாமரைச்செல்வன் ஆகியோா் உள்ளனா். நடராஜனும், தாமரைச்செல்வனும் தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி ஏரியில் மீன் பிடிக்க சனிக்கிழமை மாலை சென்றனா்.

அப்போது நடராஜன் ஏரியில் தவறி விழுந்துள்ளாா்.அதில் அவா் நீரில் மூழ்கி, அங்கேயே உயிரிழந்தாா். இதுகுறித்து செந்தாரப்பட்டி(வடக்கு)விஏஒ வேல்முருகன், அளித்த புகாரின்பேரில் தம்மம்பட்டி போலீஸாா், நடராஜனின் உடலை மீட்டு, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →