முகப்பு
சேலம்

சிவாலயங்களில் சனிப் பிரதோஷ விழா

தம்மம்பட்டி ,கெங்கவல்லி பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

தம்மம்பட்டி ,கெங்கவல்லி பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிஸ்வநாதா் உடனுறை காசிவிசாலாட்சி கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதையயடுத்து தேவாரம், திருவாசகம் ஓதியபடி, நந்தீஸ்வருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ,பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல் கெங்கவல்லி, வீரகனூா், செந்தாரப்பட்டி, கூடமலை, தகரப்புதூா் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →