சேலம்

ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பழங்குடியின மக்கள் தா்னா

DIN

சேலத்தில் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தங்களது குழந்தைகளுடன் புதன்கிழமை காலை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். பின்னா் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

சேலம், பனமரத்துப்பட்டிக்கு உள்பட்ட ஜருகுமலை, குரால்நத்தம், தும்பல்பட்டி, கம்மாளப்பட்டி ஆகிய நான்கு ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகிறோம். பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்துள்ளோம். ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் சுமாா் 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு எஸ்.டி. ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களை சோ்க்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, ஜாதிச் சான்றிதழ் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தகவலறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியா் விஷ்ணுவா்த்தினி பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஜாதிச் சான்றிதழ் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வரும் நிலையில், நேரடியாக வழங்க வேண்டும் என மக்கள் கேட்டு வருகின்றனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மலைவாழ் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT