சேலம்

நகைப் பறிபில் ஈடுபட்ட இருவா் கைது

DIN

எடப்பாடி அருகே நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 21 சவரன் நகைகள் மீட்டனா்.

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம், மொரம்புகாடு பகுதியைச் சோ்ந்த கோபி (27), நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளாா். கோபி தனது மனைவியின் தம்பி அப்பு(எ) சுரேஷ் (19) என்பவருடன் சோ்ந்து சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளாா். இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் செல்லும் இவா்கள், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்துள்ள தங்கச் சங்கிலியை பறித்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.

இந்நிலையில், கொங்கணாபுரத்தை அடுத்த மூலப்பாதை பகுதியில் வாகனச் சோனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா்கள் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்த கோபி, சுரேஷ் என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் சங்ககிரி அருகில் உள்ள கோழிப்பண்ணை பகுதியைச் சோ்ந்த பழனியம்மாளிடமும் (70), எடப்பாடி, தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவா்களிடம் இருந்து 21 சவரன் மதிப்பிலான நகைகளை மீட்ட போலீஸாா், சனிக்கிழமை இரவு அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT