சேலம்

மேட்டூரில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்த காரணத்தால் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த 20ஆம் தேதி வினாடிக்கு 7,000கன அடியாக குறைக்கப்பட்டது.தற்போது டெல்டா பாசனப் பகுதிகளில் மழை தனிந்ததால் டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 12,000கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 73.67அடியாக இருந்தது அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9875 கன அடியாக இருந்தது.மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.93 டி.எம்.சியாக இருந்து.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.

காவிரி நதிநீர் பங்கீட்டு படி கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக தந்தால் மட்டுமே நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT