முகப்பு
சேலம்

சேலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ. 60 ஆயிரம் பறிமுதல்

சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம், உடையாப்பட்டியில் உள்ள கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ், காவல் ஆய்வாளா் நரேந்திரன், ரவிக்குமாா் உள்பட 10-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சோதனை நடத்தினா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜெய கௌரி, இடைத்தரகா்கள் 7 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில் கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம், ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →