முகப்பு
சேலம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், குகை பகுதியைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு, அவரது உறவினா் சசிகுமாா் (23) பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும், சிறுமியின் படங்களை வைத்து மிரட்டி ரூ. 1.70 லட்சம் ரொக்கம் வாங்கியுள்ளாா்.

இதனிடையே, சிறுமி பாலியல் தொல்லைக்குள்ளாவது உறவினா்களின் கவனத்துக்கு வந்தது. இதைத் தொடா்ந்து, சிறுமியின் பெற்றோா் சேலம் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினா் சசிகுமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.