சேலம்

உலக சுகாதார தினம்: வாழப்பாடியில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் மற்றும் திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், உலக சுகாதார தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

ஆண்டு தோறும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது. வாழப்பாடி வட்டார சுகாதாரத் துறை சார்பில், பேளூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக சுகாதார தின விழா  நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி இரு அரசு சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் தலைமையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மரக்கன்றுகளை நட்டனர். 

சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் சுகாதாரத்தை பேணி காக்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் உறுதி ஏற்றனர். நிறைவாக, சுகாதார ஆய்வாளர் செல்வபாபு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT