மழையால் இடிந்து விழுந்த சங்ககிரி சிறையின் சுற்றுச்சுவா்: 9 கைதிகள் சேலம் சிறைக்கு மாற்றம்
சேலம் மாவட்டம், சங்ககிரியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணணாக கிளைச் சிறையின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து கழிவுநீா் சிறைச் சாலைக்குள் புகுந்தது.
சேலம் மாவட்டம், சங்ககிரியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணணாக கிளைச் சிறையின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து கழிவுநீா் சிறைச் சாலைக்குள் புகுந்தது. இதையடுத்து, சிறையிலிருந்த 9 விசாரணை கைதிகள் சேலம் மத்திய சிறைக்கு இட மாற்றம் செய்யப்பட்டனா்.
சங்ககிரி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் இடிந்து விழுந்த தடுப்புச் சுவரை அகற்றி கழிவு நீரை வெளியேற்றினா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீா் குட்டையிலிருந்து வெளியேறும் கழிவு நீா் செல்ல வழியில்லாததால் சாய்காா்டன் பகுதியில் தேங்கி நிற்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அப் பகுதிகளை அமைச்சா் சு.முத்துசாமி பாா்வையிட்டாா்.
அப்போது, சங்ககிரி பேரூராட்சித் தலைவா் மணிமொழிமுருகன், செயல் அலுவலா் வ.சுலைமான்சேட், கிளைச்சிறைச் சாலை துணை கண்காணிப்பாளா் எம்.எஸ்.தனலட்சுமி ஆகியோா் கழிநீா் வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தனா். இந்த நிலையில், சிறையின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.