சேலம்

தமிழக முதல்வர், உழவர்களுடனான கலந்துரையாடல்: எடப்பாடி விவசாயிகள் நேரலையில் பங்கேற்பு

DIN

எடப்பாடி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்குபெறும் உழவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் மின் இணைப்பு ஆணைகள் வழங்குதல் குறித்த நேரலை நிகழ்ச்சி எடப்பாடி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

இந்நேரலை நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மின்சார வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்சார வாரிய துறை மேலாண் இயக்குனர் ராஜேஷ் லக்கானி ஆகியோரது சிறப்புரைகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. 

நிகழ்ச்சியில் தஞ்சாவூர், வேலூர், நாமக்கல் மாவட்ட விவசாயிகளுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடிய தமிழக முதல்வர், கரூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட புதிய  மண்டலங்களை தொடங்கிவைத்து, திமுக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு திட்டம் குறித்தும், தற்போது  தமிழக விவசாயிகளுக்கு மின்சார வாரியத்தால் வழங்கப்பட்டு வரும் தடையற்ற மின் வினியோகம் குறித்தும் பேசினார். 

இதைத் தொடர்ந்து தற்போதைய தமிழக திமுக ஆட்சி காலத்தில் இலவச மின்சாரம் வசதி பெறும் ஒரு லட்சமாவது பயனாளியான  உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி கந்தன் பிள்ளைக்கு இலவச மின் இணைப்பு ஆணை வழங்கிய முதல்வர் காணொளி வாயிலாக விவசாயிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார். 

எடப்பாடியில் நடைபெற்ற நேரலை நிகழ்வில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட அவைத்தலைவர் கோபால், நகர செயலாளர் டி. எம்.எஸ் பாஷா,   மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஏ.முருகேசன் மற்றும் மின்சாரத்துறை கோட்ட பொறியாளர் தமிழ்மணி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

SCROLL FOR NEXT