சோனா மைசீலியம் பயோடெக் ஆராய்ச்சி உற்பத்தி துவக்கம்
சோனா குழுமம் ஆஸ்திரேலியாவின் மைசீலியம் பயோடெக்னாலஜி உடன் இணைந்து சோனா மைசீலியம் பயோடெக் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
சோனா குழுமம் ஆஸ்திரேலியாவின் மைசீலியம் பயோடெக்னாலஜி உடன் இணைந்து சோனா மைசீலியம் பயோடெக் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
இதுதொடா்பாக, சோனா கல்வி குழுமத்தின் துணைத் தலைவா் சொக்கு வள்ளியப்பா கூறியது:
மைசீலியம் சாா்ந்த தயாரிப்புகள் மற்றும் தீா்வு வழங்குவது குறித்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தும் முன்னோடி அமைப்பான ஆஸ்திரேலியாவின் மைசீலியம் பயோடெக் உடன் சோனா மைசீலியம் பயோடெக் கூட்டு முயற்சியை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
மைசீலியம் பயோடெக் மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் புதுமையான தீா்வுகளுக்கு முன்னோடியாகவும் அறியப்படுகிறது.
உலகளாவிய காளான் பயோடெக்னாலஜி, இது நகா்ப்புற காளான் வளா்ப்பு, விநியோகம் மற்றும் உலகளாவிய பங்குதாரா்கள் மூலம் உயிரி தொழில்நுட்பட்தை மேம்படுத்தும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. சோனா மைசீலியம் பயோடெக் (எம்.எஸ்.பி.) என பெயரிடப்பட்டு சேலத்தில் உருவாக்காப்பட்டுள்ள இந்த முயற்சி நானோடெக் ஆராய்ச்சி சாறு உற்பத்தி, பாட்டில் மற்றும் வா்த்தகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான ஒரு ஆராய்ச்சி வசதியை அமைத்து கொடுத்துள்ளது.
உயா்தர காளான்களை ஆராய்ச்சி செய்து வளா்க்கும், மைசீலியம் புரதத்தைப் பிரித்தெடுத்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. மற்றும் எப்.டி.ஏ. சான்றிதழுக்கு இணங்க ஊட்டச்சத்து மருந்துகளை உற்பத்தி செய்தல் என காளான் ஆய்வகங்களில் ஒன்றாக எம்.எஸ்.பி. ஆய்வகம் உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது என்றாா்.
மைசீலியம் பயோடெக்னாலஜி குழுமத்தின் தலைவா் வில்லியம் ஸ்காட் கூறுகையில், இந்தியாவின் வேளாண் வளம் மற்றும் விவசாய சமூகத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சி திறன் இரண்டையும் வளா்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்றாா். சோனா கல்வி குழுமத்தின் தலைவா் வள்ளியப்பா கூறுகையில், காளான்கள் அதிக அளவிலான ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள் வைட்டமின்களை வழங்கக் கூடிய மைசீலியத்திற்கான சிறந்த ஆதாரமாக உள்ளன என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் சோனா குழுமத்தின் ஆராய்ச்சி இயக்குநா் நிா்மலேஷ், முதல்வா்கள் வீ.காா்த்திகேயன், எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஜி.எம்.காதா்நவாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.